கூலிம், பாயா பெசார் வட்டாரத்தில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியான தாமான் கங்கோங் இண்டா பகுதியின் அருகாமையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 30 குடியிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் .
அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் பாயும் சுங்கை செலுவாங் ஆற்றின் நடுவே தடுப்பு சுவர் போன்று ஆறு நெடுகிலும் தடுப்பு கற்கள் இறக்கப்பட்டதால், ஆற்றின் அகலம் குறைந்துள்ளது. இதன் மூலம் கனத்த மழையின் போது, ஆற்று நீர் கரைப்புரண்டோடி, போதுமான அகலமின்றி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தாமான் கங்கோங் இண்டா குடியிருப்புப் பகுதியை வெள்ளக்காடாக மாற்றும் சாத்தியம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
ஏற்கனவே ஒரு முறை சிறிது நேரமே பெய்த கனத்த மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், ஆறு அகலமாக இருந்ததால், நீர் பெருக்கெடுத்து குடியிருப்புப் பகுதியில் நுழையவில்லை. தற்போது ஆறு சுருக்கப்பட்டதால் அத்தகைய ஓர் அபயாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குடியிருப்பாளர் சுதா சண்முகயா தெரிவித்தார்.
ஆற்றின் அகலம் சுருக்கப்படும் இத்திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் வெள்ள அபாயம் மூன்று மடங்காக அதிகரிக்க சாத்தியம் இருப்பதாக Sutha அச்சம் தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
தாமான் கங்கோங் இண்டா அருகாமையில் வீடமைப்புத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு !
Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


