ஷா ஆலாம், ஜூலை.12-
தன்முனைப்பும், ஆன்மிகத்தையும் போதிப்பதாகக் கூறி, புனித நீராடல் குளியல் என்ற பெயரில் அரை நிர்வாண நடனம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பில் சிலாங்கூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷா ஆலாம் வட்டாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் இப்புகார் தொடர்பில் போலீசார் தீவிரமாக பூர்வாங்க விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டும், இவ்வாண்டு பிப்ரவரி மாதமும் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் இன்னும் யாரும் விசாரிக்கப்படவில்லை என்ற போதிலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








