Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

நவ.22-

பாதுகாவலர் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 லட்சம் ரிங்கிட் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று பாதுகாவலர்களை போலீஸ் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அலோர்ஸ்டார் காவல் நிலையத்திற்கு வந்த போது 28 முதல் 38 வயது வரையிலான அந்த மூன்று பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சையிட் பஸ்ரி சையிட் அலி கூறினார்.

அலோர் ஸ்டார் மெர்கோங் வட்டாரத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதுவாலர் வேனில் இருந்த 2 லட்சம் ரிங்கிட் பறிபோனதாக அந்த மூன்று பாதுகாவலர்களும் தங்கள் புகாரில் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த மூன்று பாதுகாவலர்களும் பொய்யான தகவலை வழங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து மூவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
3 pengawal keselamatan ditahan buat laporan palsu

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →