Apr 8, 2026
Thisaigal NewsYouTube
மூவார்: முதியோர் இல்லத்தில் அதிரடி சோதனை - 27 சட்டவிரோத குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

மூவார்: முதியோர் இல்லத்தில் அதிரடி சோதனை - 27 சட்டவிரோத குடியேறிகள் கைது

Share:

முதியோர் இல்லம் மற்றும் வணிக வளாகங்களில் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியதாக, ஜோகூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவார் குடிநுழைவுத் துறை பிரிவினர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடத்திய இந்த சோதனையில், இந்தோனேசியா மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 17 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் பிடிபட்டனர். ஒரு மாதக் குழந்தை முதல் 48 வயதுடையவர்கள் வரை இதில் அடங்குவர்.

பொதுமக்களின் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கைதான அனைவரும், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. தற்போது அவர்கள் பொந்தியான், பெக்கான் நானாஸ் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமது ருஸ்தி முகமது தாருஸ்எச்சரித்துள்ளது.

Related News