Mar 23, 2026
Thisaigal NewsYouTube
இந்தியன் 2 நட்சத்திரப்பட்டாளங்கள் வருகை
தற்போதைய செய்திகள்

இந்தியன் 2 நட்சத்திரப்பட்டாளங்கள் வருகை

Share:

புக்கிட் ஜலீல் , ஜுன் 28-

இந்தியன் 2 திரைப்படத்தின் நட்சத்திர நடிகர்கள் உட்பட படக்குழுவினர் தங்களது திரைப்பட விளம்பரத்திற்காக மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்துள்ளனர்.

புக்கிட் ஜலீல் பெவிலியன் TGV அரங்கில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்கள், பிரிக்பீல்ட்ஸ் NU செண்டரலில் நடந்த ரசிகர்கள் சந்திபிலும் கலந்து கொண்டனர்.

1996 ஆம் ஆண்டு வெளியீடு கண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் இந்தியன் ஆகும்.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதன் இரண்டாம் பாகமான இந்தியன் 2 என்ற தலைப்பில் சுதந்திரத்தின் சக்திவாய்ந்த கதையுடன் கூடிய இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளது.

இத்திரைப்படம் #comebackindian #Zerotolerance # சேனாபதி என்ற ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் பெரியத் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

மலேசியாவில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமான உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன், எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சித்தார்த் உட்பட இதர பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தை சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் திரைப்பட விநியோகஸ்தருமான 3 புள்ளி திரைப்படங்கள் மலேசியாவில் வெளியீடு செய்கிறது.

தவிர இந்நிறுவனம் மலேசியாவில் 156 திரையரங்களுக்கு மேல் இத்திரைப்படத்தை வெளியீடு செய்கிறது.

Related News