ஜோகூரில் பணிபுரியும் 13 ஆயிரத்து 400 அரசுத் துறை ஊழியர்கள் 2 மாத ஊதியத்தை சிறப்பு உதவிநியாகப் பெற இருக்கிறார்கள் என அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி அறிவித்தார்.
மாநில அரசால் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
ஜொகூர் அரசாங்கத்தின் சிறந்த செயலாக்கத்தால், வருடாந்திர இலக்குகளை அடைந்துள்ளது, ஜோகூர் அரசு ஊழியர்களுக்கான பாராட்டுக்குரிய அடையாளமாக, உண்மையான சாதனைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான அணுகுமுறையை தமது தரப்பு முன்னெடுப்பதாக ஒன் ஹஃபிஸ் கூறினார்.








