Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

Share:

புலாவ் தெங்கோல் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதாக நம்பப்படும் முக்குளிப்பாளர் ஒருவரைத் தேடும் நடவடிக்கையானது 94.93 சதுர கடல் மைல்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

66 வயதான டாம் பெங் ஹூங் என்பவரை கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் பல முகமைகளும், தனியார் தரப்புகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA தெரிவித்துள்ளது.

மேற்பரப்பு தேடுதல் பணிகள் பகாங் மாநில MMEA-வின் ‘பாட் பெர்காசா 45’ கப்பலின் உதவியுடனும், திரெங்கானு மாநில MMEA-வின் ‘கே.எம் ரெடாங்’ கப்பலின் உதவியுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தீவில் செயல்பட்டு வரும் மூன்று முக்குளிப்போர் மையங்கள், சம்பவம் நடந்த பகுதியில், நீருக்கடியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக MMEA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்