Mar 16, 2026
Thisaigal NewsYouTube
இரு இந்தியப் பிரஜைகள் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு இந்தியப் பிரஜைகள் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர்,ஜன.22
தெலெகோம் மலேசியா விற்கு சொந்தமான 6 லட்சத்து 49 ஆயிரத்து 189 வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை திருடியது மற்றும் அவற்றை அழித்தது தொடர்பில் இரு இந்தியப் பிரஜைகள் உட்பட நால்வர், மலாக்கா, ஆயெர் கெரொ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்தியப் பிரஜைகளான 34 வயது தர்மராஜ் ராமர், 25 வயது புவியரசன் அர்ஜுணன் மற்றும் உள்ளூர் பிரஜைகளான 42 வயது ஹியு வீ லூ, 48 வயது யொ சூன் லெங் ஆகியோரே குற்றஞ்சாடடப்பட்ட நான்கு நபர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 7 ஆம் தேதி வரை மலாக்கா தெங்ஙாவில் உள்ள டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான பாதுகாப்பு பெட்டகத்தில் 442 நுழைவு அனுமதி கார்ட்டை பயன்படுத்தி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான விலை உயர்ந்த உடமைகளை திருடியதாக நால்வர் மீது களவாடல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News