Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கினேன், நிறுவன இயக்குநர்
தற்போதைய செய்திகள்

தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கினேன், நிறுவன இயக்குநர்

Share:

பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பில் அன்றைய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கும், அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் தலா 20 லட்சம் வெள்ளியை வழங்கியதாக அந்த கடலடித்திட்டத்தின் பிரதான குத்தகை நிறுவனமான Zenith Consruction Sdn. Bhd. டின் இயக்குநர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

லிம் குவான் எங்கிற்கு 20 லட்சம் வெள்ளியை காசோலையாக வழங்கிய வேளையில் நஜீப்பிற்கு 20 லட்சம் வெள்ளியை ரொக்கமாக வழங்கியதாக 64 வயது ஜாருல் அஹ்மத் முகமது சுல்கிஃப்லிஎன்ற அந்த இயக்குநர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வர்த்தகர் ஜி. ஞானராஜா மூலமாக இந்தப்பணம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 630 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக லிம் குவான் எங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வழக்கில இயக்குநர் ஜாருல் அஹ்மத் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.

Related News