Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்துவுடன் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்பை நிராகரித்த பாஸ்
தற்போதைய செய்திகள்

பெர்சாத்துவுடன் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்பை நிராகரித்த பாஸ்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இரு கட்சிகளும் இன்னும் இடம்பெற்றிருந்தாலும், பெர்சாத்துவுடன் மீண்டும் அரசியல் உறவை சீரமைக்கும் வாய்ப்புக்கு பாஸ் தனது கதவை மூடி விட்டது.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சாத்து தனித்து போட்டியிட்டதையும், அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

“கொள்கை அடிப்படையில், நெகிரி செம்பிலான் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு எதிராகப் போட்டியிட்டனர். இப்போது பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள்,” என்று ஹாடி கூறினார்.

கடந்த ஆண்டு இறுதியில் பாஸ் மற்றும் பெர்சாத்து இடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் இரு கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் முடிவுக்குக் கொண்டுவந்தது.

பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தற்போது தலைமை வகிக்கும் பாஸ், எதிர்க்கட்சி கூட்டணியை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும், அதை “நச்சுத்தன்மை கொண்டதாக” மாற்றியுள்ளதாகவும் பெர்சத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அண்மையில் குற்றஞ்சாட்டினார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து