நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாமல் உள்ள 51 மலேசியர்களின் பெயர் பட்டியலை நேபாள சுற்றுலா அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 537 வெளிநாட்டவர்கள் மாயமானதாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில், லீஃப் ஹாலிடே, ஃபிஷ்டெயில், ட்ரீம் திபெத் டிராவல் அண்ட் டூர் மற்றும் கைலாஷ் ஜர்னீஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொண்ட 51 மலேசியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான 51 மலேசியர்களின் விபரங்கள் வருமாறு:
ஏ கணேசன் ஆனந்தன்
அப்பன்னா ஏ முத்தாலூ
அருணாசலம் கருப்பையா
அஸ்மான் கரீம்
பாலசிங்கம் கேசவன்
பிரபாகரன் கிருஷ்ணன்
ஈஸ்வரி மணி ராஜ்
குணநேசன் வெள்ளையசாமி
குணவதி முத்துசாமி
இந்துமதி சுப்பிரமணியம்
ஜேசன் நியோ
கலை மாதே கருப்பையா
கலைச்செல்வி பி நாராயணசாமி
கண்ணன் கிருஷ்ணா
கருணாநிதி சுந்தரம்
கிருபாநிதி அழகப்பன்
கோமதி ரெத்தினம்
கிருஷ்ணன் வடிவேலு
லட்சுமி சின்னப்பன்
லிங்கம் சாமிக்கண்ணு
மலர்விழி / மலனி எம் வேலு
மங்கள வாணன் கிருஷ்ணசாமி
ஃபக்ருல் முனீர் ஈசா
நோஹான் சலீம்
பட்சில் டாரோஸ்
சானி ஹாருல்
நாசிர் அப்துல் தாலிப்
ஹாசிக் இஸ்மாயில்
முருகன் சுப்பிரமணியம்
நகேந்திரன் கணேசன்
நவீன் பழனி
நீலவேணி மாரிமுத்து
பத்மாவதி ஏ கோவிந்தசாமி
பூபாலன் முருகையா
பூர்ணிமா அழகப்பன்
ரஜிதா சிவன்
ராமன் சுப்பிரமணியம்
ரவீந்தர் ஐயாவூ
எஸ் கோமதி சித்தராலிங்கம்
எஸ் ராமு சவாசாமி
சந்தனலட்சுமி திருஞானசம்பந்தம்
சரஸ்வதி நாகரத்தினம்
சாரதா அழகப்பன்
ஷஹாபுதீன் பின் முன்
சுகுணா பாலன்
தனபாலன் முத்து
வள்ளி பழனியாண்டி / பழனிசாமி
வனஜா வடிவேல்
வெண்ணிலா முனியாண்டி
விஜயன் பெருமாள்
யோகேஸ்வரி சுப்பிரமணியம்
இதற்கிடையில், பேரிடரில் உயிரிழந்ததாக நம்பப்படும் ஆனால் இதுவரை அடையாளம் காணப்படாதவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பட்டியலையும் நேபாள போலீஸ் துறை தயாரித்துள்ளது. தங்களது உறவினர்களை அடையாளம் காண குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நேபாள போலீஸ் துறையின் முகநூல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர் குறியீடு மூலம் இந்தப் பட்டியலைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாள வெள்ளத்தைத் தொடர்ந்து இதுவரை 57 மலேசியர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா இன்று தெரிவித்துள்ளது.








