Sep 6, 2026
Thisaigal NewsYouTube
3.2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல் – கணவன், மனைவி உட்பட 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

3.2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல் – கணவன், மனைவி உட்பட 7 பேர் கைது

Share:

பினாங்கில் மூன்று தனித்தனி போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை போலீசார் முறியடித்துள்ளனர். கணவன், மனைவி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன், 3.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 15 முதல் 22ஆம் தேதி வரை பினாங்கு, தீமோர் லாவுட், செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை தெங்கா பகுதிகளில், பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்டன என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டெனிஸ் லிம் தெரிவித்தார்.

தீமோர் லாவுட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில், 26 வயது கணவரும் 25 வயது மனைவியும் இந்தக் கும்பலுக்குத் தலைமை வகித்ததாக நம்பப்படுகிறது.

மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு 89 ஆயிரம் ரிங்கிட் என்றும் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது என்றும் டெனிஸ் லிம் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து