சிரம்பான், செப்டம்பர்.29-
சிரம்பானைச் சேர்ந்த பள்ளி ஒன்றில், மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அப்பள்ளியைச் சேர்ந்த 9 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் இண்டா வாட்டரைச் சேர்ந்த அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
குழந்தைச் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) -இன் கீழ் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








