May 21, 2026
Thisaigal NewsYouTube
காதலியைக் கொன்ற பழ வியாபாரி
தற்போதைய செய்திகள்

காதலியைக் கொன்ற பழ வியாபாரி

Share:

கடந்த 2 வாரங்களுக்கு முன் தனது காதலொயைக் கொலை செய்ததாக பழ வியாபாரி ஒருவர் மீது இன்று கிள்ளான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கொலை செய்ததாக 44 வயது கூ சூன் ஹெங் மீது வைக்கப்பட்டக் குற்றச்சாட்டு தமக்குப் புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் அமிருல் அஷ்ராஃப் அப்துல் ரஷிட் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

கொலை வழக்கு உயிர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டதால், குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து சாட்சியம் ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, நண்பகல் 1.00 மணி அளவில், ஜாலான் பாயு திங்கி 5, தாமான் பாயு திங்கி யில் தமது 26 வயது காதலியான கோ சி லிங் ஐ சோன் ஹெங் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் 302இன் படி குற்றஞ்சாட்டப்பட்டது.

Related News