ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் பெண் ஒருவரை மடியில் அமர வைத்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் அந்தப் பெண் நாளை புதன்கிழமை மலாக்கா, ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.
36 வயதான அந்தப் பேருந்து ஓட்டுநரும், அவரது தோழியுமான அந்தப் பெண்ணும் அடையாளம் காணப்பட்டு, விசாரணைக்கு வருமாறு போலீசாரால் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து ஜோகூரை நோக்கிச் சென்றபோது நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்று ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ராபர்ட் தெரிவித்தார்.








