Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து
தற்போதைய செய்திகள்

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

Share:

"தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" என்று சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் தமது மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கல்வித்துறையில் தடம் பதித்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முதல் இந்திய பாலர் பள்ளி கிளை நிறுவனராகத் திகழும் பரமேஸ்வரி மனோகரன், கவித்துவமான வரிகளுடன் தனது மகளிர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

"காலம் உனக்குத் தந்த சிறகுகள் ஈக்களோடு பறக்க அல்ல, வானைத் தொடவே" என்று குறிப்பிட்ட அவர், பெண்கள் தங்கள் போதிமரத்தைத் தேடி அமர வேண்டும் என்றும், வாழ்வெனும் கடலைத் துணிச்சலோடு பருக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

மலேசியாவில் 8 கிளைகளுடன் வெற்றிநடை போடுவதோடு, இந்தியாவிலும் 'Sun QIDZ International' நிறுவனத்தை நிறுவி உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ள பரமேஸ்வரி மனோகரனின் , சாதனைப் பயணம், பல பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

பெண்மையின் கம்பீரத்தையும் நம்பிக்கையையும் வலியுறுத்திய அவர், வாழ்க்கை என்பது வெறும் பட்டியலிடப்பட்ட சம்பவங்களின் ஊர்வலம் அல்ல என்றும், பாதகமான சூழல்களைச் சாதகமாக மாற்றுபவர்களே வெற்றியாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

"பெண் என்பது பாசத்தால் உலகை அணைக்கும் அமைதியின் மொழி; ஆனால் சவால்கள் வரும்போது அலைபோல் எழும் துணிச்சலே அவளது உயிர்த்துடிப்பு" என்று வர்ணித்த அவர், ஒவ்வொரு பெண்ணும் தனது கனவுகளுக்கு சிறகு கட்டி, தனது வாழ்வைத் தானே வடிவமைக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.

மேலும், புதிய பள்ளிகளைத் தொடங்க விரும்புவோருக்குத் தேவையான நிதி உதவி, இடத்தேர்வு மற்றும் நிர்வாக ஆலோசனைகளை வழங்கி வரும் பரமேஸ்வரி மனோகரன், பெண்கள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைய இதுவே சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தார். சவால்களைச் சக்தியாக மாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் வலிமை, நம்பிக்கை மற்றும் நிறைவு நிறைந்த இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அவர் உரித்தாக்கியுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு