மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அதான்துயா ஷரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்க ப்பட்டுள்ள அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போலீஸ் அதிகாரியான சிருல் அசார் , ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு பயமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மலேசியாவில் ஜாமீனில் இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்ற போது அந்த நாட்டின் குடிநுழைவு சட்டத்தின் கீழ் பிடிபட்ட சிருல் அசார், சிறைத் தண்டனைக்கு ஆளாகினார். பல ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரை விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவுக்கு திரும்ப பயமாக இருப்பதகாவும், ஆஸ்திரேலியாவிலே வாழ விரும்புவதகாவும், தமக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம் தர வேண்டும் என்றும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அந்த அந்த முன்னாள் போலீஸ்காரர் தெரிவித்துள்ளார்.








