May 24, 2026
Thisaigal NewsYouTube
பத்து வயது சிறுமியை கொலை செய்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பத்து வயது சிறுமியை கொலை செய்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு

Share:

சுங்கை சிப்புட் , ஆகஸ்ட் 01

இரண்டு வாரங்களுக்கு முன்பு 10 வயது Orang Asli சிறுமியை கொலை செய்ததாக 17 வயது இளைஞர் ஒருவர் பேரா, சுங்கை சிப்புட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் நூருல் அசிஃபா ரெட்சுவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பதின்ம வயதுடைய இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குற்றச்சாட்டின் தன்மையை புரிந்துக்கொள்வதற்கு அடையாளமாக தலையை அசைத்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞர் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுங்கை சிப்புட், Lasah அருகில் Pos Kuala Mu, Kampung Bersah என்ற இடத்தில் ஒரு சதுப்புநிலக்காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமி நுரைனா ஹுமைரா ரோஸ்லி என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த இளைஞர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News