கிள்ளான், பாவால் - கம்போங் சுஙை ஊடாங் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 வாகனங்கள் சேதமுற்றன.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.03 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வண்டியுடன் அவ்விடத்திற்கு விரைந்த 20 வீரர்கள், மூழு வீச்சில் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையில் துணை இயக்குநர் முஹமட் எஹ்சான் முஹமட் ஸேன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஒரு பெரோடுவா மைவி காரும், 6 மோட்டார் சைக்கிள்களும் நாசமடைந்த வேளையில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்று அவர் குறிப்பிட்டார். இவ்விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


