Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஒரு தலை மதமாற்றம் - லோவின் பிள்ளைகள் பராமறிப்பு உரிமையைக் கோரும் எம்.ஏ.ஐ.பி.எஸ்
தற்போதைய செய்திகள்

ஒரு தலை மதமாற்றம் - லோவின் பிள்ளைகள் பராமறிப்பு உரிமையைக் கோரும் எம்.ஏ.ஐ.பி.எஸ்

Share:

ஒரு தலை பட்சமாக மதம் மாற்றப்பட்ட லோ வின் மூன்று குழந்தைகளின் பராமறிப்பு குறித்த நீதிமன்றத்தின் ஆணையை பெர்லிஸ் மாநில இசுலாம், சமய, மலாய் சம்பிரதாய மன்றமான எம்.ஏ.ஐ.பி.எஸ் மேல்முறையீடு, அடுத்த ஆண்டு சனவரி 1சஆம் தேதி அன்று செவிமெடுப்புக்கு வருகிறது.

அந்த மூன்று குழந்தைகளின் தாயாரான லோ சியூ ஹாங் சாப்ரில் வாதாடிய வழக்கறிஞர் குணமலர் இது குறித்து தெரிவிக்கயில், எம்.ஏ.ஐ.பி.எஸ் அவசர நிலை கோரிக்கையால் சனவரி 10 ஆம் தேதிக்கு விரைவுப் படுத்தப்பட்டிருக்கிறதாக குறிப்பிட்டார்.

இசுலாத்தைத் தழுவிய லோ-வின் முன்னாள் கணவர் முஹம்மது நாகஸ்வரன் முனியாண்டியை விவாகரத்து செய்யும்போது , அவர்களின் மூன்று குழந்தைகளைப் பராமறிக்கும் உரிமையை மாற்ற எம்.ஏ.ஐ.பி.எஸ் கோரி இருந்தது.

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என எம்.ஏ.ஐ.பி.எஸ் கோரி இருந்த நிலையில், தாங்கள் இசுலாத்திலேயே இருக்க விருப்பப்பட வில்லை என அந்த மூன்று குழந்தைகளும் தெரிவித்ததோடு, அந்த மாற்றத்தால் குழந்தைகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்பதால் எம்.ஏ.ஐ.பி.எஸ்இன் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 15 வயது இரட்டைப் பெண் பிள்ளைகளுக்கும் 11 வயது ஆண் பிள்ளைக்கும் இசுலாம் சமயக் கவி கிடைக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என எம்.ஏ.ஐ.பி.எஸ் கேட்டுக் கொண்டது.

மேலும், அருகில் உள்ள பள்ளிவாசலில் அந்த 11 வயது ஆண் பிள்ளை வெள்ளிக்கிழமை தொழுகையை நிறஒவு செய்ய வேண்டும் எனவும், ஒரு பாதுகாவலர் எனும் முறையில் லோவுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கவும் எம்.ஏ.ஐ.பி.எஸ் அனுமதி கோரியது.

கடந்த 2020 ஜூலை 7 ஆம் தேதி அந்த மூன்று பிள்ளைகளையும் ஒரு தலை பட்சமாக அவர்களின் தந்தை மதம் மாற்றினார். அந்த மத மாற்றம் இறுதியானது என கடந்த மே 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இருப்பினும், லோ அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

அந்த மதமாற்றம் ஒரு தலை பட்சமானது எனவும் பிள்ளைகளின் மத மாற்றத்திற்கு தாய்தந்தை இருவரின் அனுமதியும் அவசியம் எனக் குறித்து அந்த மதமாற்றத்தை கூட்டரசு நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.

Related News