கோலாலம்பூர், டிசம்பர்.12-
தற்போது பெய்து வரும் கனமழை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.
இந்த அடை மழையில் கடும் வெள்ளம் ஏற்படுமா? என்பது குறித்து வடிக்கால், நீர் பாசன இலாகாதான் அறிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மழைக் காலமாகும். இதன் தாக்கம், சரவாக், மேற்குப் பகுதியில் கடுமையாக இருக்கும் என்று டாக்டர் ஹிஷாம் தெரிவித்தார்.








