Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஐந்தாம் படிவ மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

ஐந்தாம் படிவ மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

மலாக்கா, அக்டோபர்.11-

மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் படிவ மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டதை மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் உறுதிப்படுத்தினார்.

17 வயதுடைய அந்த நான்கு மாணவர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவர்களை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 375 பிரிவின் கீழ் அந்த நான்கு மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

Related News