Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பிரதிநிதித்துவ மனுவை இன்னும் சார்வு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

பிரதிநிதித்துவ மனுவை இன்னும் சார்வு செய்யவில்லை

Share:

பொது அமைதிக்கு குத்தகம் விளைவித்ததாக போலீஸ் உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன் க்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளுமாறு சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனுவை தாங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அந்த போலீஸ் அதிகாரியின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன்க்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் தாங்கள் எந்தவொரு பத்திரத்தையும் இன்னும் பிராசிகியூஷன் தரப்பினரிடமிருந்து பெறவில்லை என்று மனோகரன் மலையாளம் விளக்கினார்.

இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன்க்கு எதிரான வழக்கு விசாரணை இன்று செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, சில பத்திரங்களை மட்டுமே தாங்கள் பிராசிகியூஷன் அதிகாரியிடமிருந்து பெற்றுள்ளதாகவும், இன்னும் சில பத்திரங்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி பெறவிருப்பதாகவும் மனோகரன் தெரிவித்தார்.

Related News