மலாக்கா, நவம்பர்.26-
புக்கிட் சீனா தீ விபத்து தொடர்பாக சிலாங்கூரைச் சேர்ந்த 26 வயது பெண் உட்பட இருவரை மலாக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 11-ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், சந்தேக நபர்கள் இருவரில், அப்பெண்ணும் ஒருவர் என மலாக்கா மாநில போலீஸ் உதவி ஆணையர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், குடியிருப்புப் பகுதிக்குள் காரில் வந்த இருவர், எரியும் பொருள் ஒன்றை, வீட்டை ஒன்றை நோக்கி தூக்கி வீசுவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்துள்ளார்.
இதனைடுத்து, அப்பெண்ணுடன், ஆடவர் ஒருவரையும் கடந்த திங்கட்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர்.








