Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு

Share:

புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலாங்கூர் அரசாங்கம் கடந்த மாதம் புத்ராஜெயாவிடம் சமர்ப்பித்துள்ளது.

சுயாதீன விசாரணைக் குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் வழங்கியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையானது தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், அவர்களிடமிருந்து கருத்து கிடைத்தவுடன் பொதுமக்களுக்கும் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 308 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,254 பேர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், 87 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததுடன், 148 வீடுகளுக்கு பழுதுபார்க்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Related News