Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானிலிருந்து 3 யானைகளையும் திரும்பக் கொண்டு வருவதே சிறந்தது - அமைச்சர் கருத்து
தற்போதைய செய்திகள்

ஜப்பானிலிருந்து 3 யானைகளையும் திரும்பக் கொண்டு வருவதே சிறந்தது - அமைச்சர் கருத்து

Share:

ஜப்பானின் தென்னோஜி உயிரியல் பூங்காவிலிருந்து, தாரா, அமோய் மற்றும் கிலாட் ஆகிய மூன்று மலேசிய யானைகளும் மீண்டும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்குத் திருப்பி கொண்டு வரப்பட வேண்டும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் காலநிலை யானைகளுக்கு பொருத்தமற்றதாக உள்ள நிலையில், அம்மூன்று யானைகளில் ஒன்றான கிலாட் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அம்மூன்று யானைகளையும் மலேசியாவிற்கே திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கூறி, சில தரப்பினர் அமைச்சிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து அவற்றின் நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறி, அத்தரப்பினர், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னோஜி உயிரியல் பூங்கா மற்றும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை