Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்

குளுவாங், ஜூலை.07-

கடமையில் இருந்த பாதுகாவலரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியப் பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்ததாக நம்பப்படும் 27 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 3 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குளுவாங், ஜாலான் பங்குங்கில் ஒரு கட்டடத்தின் பின்னால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய பாதுகாவலர் போலீசில் புகார் செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

அந்த பாதுகாவலர் மரக்கட்டை மற்றும் இரும்பினால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடந்த சனிக்கிழமை ஜாலான் ஜெலுத்தோங்கில் அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழி ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: பேராக்கில் மூன்று மாவட்டப் பள்ளிகள் உடனடியாக மூடல்

புகைமூட்டம்: பேராக்கில் மூன்று மாவட்டப் பள்ளிகள் உடனடியாக மூடல்

நாடு முழுவதும் 37 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவு

நாடு முழுவதும் 37 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவு

4 மாநிலங்களில் போதைப்பொருள் வேட்டை: 2 கோடியே 568 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

4 மாநிலங்களில் போதைப்பொருள் வேட்டை: 2 கோடியே 568 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது