Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் கைது

Share:

வீடமைப்புப்பகுதி ஒன்றில் தமது காதலியைப் பார்ப்பதற்கு அந்த வீடமைப்பப்பகுதியின் பாதுகாவலர் அனுமதிக்காததால் தம்மை போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, துப்பாக்கியை காட்டிய 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் காஜாங், பண்டார் சுங்கை லோங் என்ற இடத்தில் உள்ள வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது.

சம்ந்தப்பட்ட நபர் துப்பாக்கியை காட்டியதால் பயந்து போன அந்த பாதுகாவலர், அந்த நபரை வீடைப்புப்பகுதியில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளார்.

இது குறித்து அந்த பாதுகாவலர் பின்னர போலீஸில் புகார் செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷட் ஹஸ்சான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை தேடிக் கண்டு பிடித்த போலீசார் அந்த நபர் போலீஸ்கார் அல்ல என்றும் பாதுகாவலர் நிறுவனம் ஒன்றில் வேலை செயகிறார் எஎன்பதும் தெரியவந்தது.

அந்த நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் ஷட் ஹஸ்சான் குறிப்பிட்டார். அந்நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related News