Jul 15, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் வளர்ப்பு மகனை உடல் ரீதியாக சித்திரவதை செய்த இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் வளர்ப்பு மகனை உடல் ரீதியாக சித்திரவதை செய்த இளைஞர் கைது

Share:

சிரம்பான், ஜூன்.14-

நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பானில், மூன்று வயதிற்குட்பட்ட தனது வளர்ப்பு மகனைத் தொடர்ந்து உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் யாத்திம் ஒஸ்மான் வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று இரவு 8.30 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சந்தேகநபர் அச்சிறுவனை உடல் ரீதியாகத் தாக்கியதாக நம்பப்படுவதாகவும் யாத்திம் ஒஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News