மூன்றாம் படிவ மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததுடன் அந்த மாணவியை தொடர்ந்து தகாத உறவில் ஈடுபடுத்தி வந்ததாக உணவக சமையல்காரர் ஒருவர், இன்று மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
22 வயது ஷூஹஸ்ரின் ஷா ஷுல்குஃப்லி என்ற அந்த சமையல்காரர், இவ்வாண்டு மே மாதம் முதல் ஜுன் மாதம் வரையில் மூவார், ஜாலான் பக்ரி யில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் இக்குற்றத்தை புரிந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த சமையல்காரர் மீது மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


