Aug 9, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் அமைச்சர் சைபுஃடின்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் அமைச்சர் சைபுஃடின்

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

சீன நாட்டுப் பிரஜைகளுக்கு மலேசிய குடியுரிமையைத் தாம் அங்கீகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் வன்மையாக மறுத்துள்ளார்.

எந்தவொரு சீன நாட்டுப் பிரஜைக்கும் தாம் மலேசிய குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை என்றும், அவ்வாறு மீண்டும் தனக்கு எதிராக குற்றஞ்சாட்டு கட்டவிழ்க்கப்பட்டு இருப்பது முழுக்க முழுக்க அவதூறாகும். அதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை என்று சைபுஃடின் குறிப்பிட்டார்.

குடியுரிமை அங்கீகரிக்கப்படுவது கூட்டரசு அரசியலமைப் சட்டத்திற்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் தாம் விளக்கம் அளித்து இருப்பதையும் சைபுஃடின் சுட்டிக் காட்டினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து