முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறியும் அதிரடி சோதனையில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பூச்சோங், தாமான் கின்ராராவில் உள்ள வணிக வளாகப் பகுதியில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, அதிகாரிகள் வருவதைக் கண்டு தப்பியோட முயன்ற மற்றும் மறைந்திருந்த வெளிநாட்டினரின் முயற்சிகள் ட்ரோன் வசதியோடு அதிரடியாக முறியடிக்கப்பட்டுள்ளது.
மியான்மர், இந்தோனேசியா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 வெளிநாட்டினர் பல்வேறு குடிவரவு விதிமீறல்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சட்டவிரோத வெளிநாட்டினருக்குப் புகலிடம் அளித்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, மலேசியப் பிரஜை நால்வருக்கு விசாரணைக்கான அழைப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.








