Jun 26, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோனாஸ் வெற்றி: துர்க்மெனிஸ்தானில் 2 புதிய எரிவாயு கிணறுகளை இயக்க உரிமை!
தற்போதைய செய்திகள்

பெட்ரோனாஸ் வெற்றி: துர்க்மெனிஸ்தானில் 2 புதிய எரிவாயு கிணறுகளை இயக்க உரிமை!

Share:

பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு இரண்டு புதிய எரிவாயு கிணறுகளை இயக்குவதற்கான உரிமையை துர்க்மெனிஸ்தான் வழங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்குப் பிரதமர் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் ஒரு அசாதாரண வெற்றியாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒருவராக பெட்ரோனாஸ் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் பெட்ரோனாஸ் நிறுவனத்திடமிருந்து நாட்டிற்குப் பெறப்படும் லாப ஈவுத்தொகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் கூடுதல் நிதி வருவாய், மலேசியாவின் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்றும் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டுள்ளார்.

Related News