பேரா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க, அவைகளை முறையாக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்ய மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தாம் முன்வைத்த இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக மாநில இந்திய விவகாரங்கள் மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்து, கிறித்துவ மற்றும் சீன சமூக வழிபாட்டுத் தலங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்படும் என்றார் அவர்.
இன்று காலையில் சுங்கை சிப்புட், எங்கோர் காரையில் உள்ள 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு அன்னை ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் ஆலயத்தின் 3-வது மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பின்னர் டத்தோ சிவநேசன் இதனை தெரிவித்தார்.
குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட இப்பள்ளிக்காக, பண்டார் ஸ்ரீ செண்டாயன் அருகேயுள்ள மலேசியன் விஷன் வேலி பகுதியில் மாநில அரசு 6 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அங்கு அமையவிருக்கும் புதிய வளாகம், எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 4 மாடிகளுடன் மிகவும் நவீனமாகவும் விசாலமாகவும் வடிவமைக்கப்படவிருக்கிறது. நவீன கற்றல் சூழலுக்கு ஏற்ப 12 வகுப்பறைகள், அறிவியல் மற்றும் கணினி அறைகள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இதில் இடம்பெறவுள்ளன. இப்பள்ளியை முழுமையான அதிநவீன வளாகமாக மாற்றுவதே இந்த நிதி திரட்டும் நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விவரித்தார்."
முன்னதாகப் பேசிய ஆலயத் தலைவர் கந்தசாமி இராமன், நிதி உதவி வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலயம் சார்பில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இக்கும்பாபிஷேக திருப்பணிக்கு பேரா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ இராமசாமி நிதி உதவி வழங்கியதையும் கந்தசாமி நினைவுகூர்ந்தார்.










