கோலாலம்பூர், டிசம்பர்.06-
ஆடவர் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலையில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆடவர் இறந்து கிடந்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இது தொடர்பாக காலை 7.52 மணிக்குப் போலீஸ் துறை அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். 35 வயதுடைய அந்த ஆடவரின் உடலில் எந்தவொரு காயங்களும் காணப்படவில்லை. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்படுத்தியிருப்பதாக முகமட் லாஸிம் குறிப்பிட்டார்.








