Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்
தற்போதைய செய்திகள்

சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

நாட்டில் தகுதியுள்ள 16.5 மில்லியன் மக்களில் சுமார் 14.8 மில்லியன் பேர், அதாவது 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரோன்95 பெட்ரோலை ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையில் பெற்றுள்ளதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின்படி, 12.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விற்பனை அல்லது 6.46 பில்லியன் லிட்டர் பெட்ரோல் பயன்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது.

இன்று நாடாளுமன்ற மேலவைக் கூட்டத்தில் மன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான அமைச்சின் பதில் உரையின் போது பேசிய அமீர் ஹம்ஸா பூடி95 திட்டமானது மைகாட் (MyKad) முறையின் மூலம் மிக எளிதாகவும், நிலைத்தன்மையுடனும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை இது காட்டுவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, வெளிநாட்டினர் இந்த மானியத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து, உண்மையான மலேசியர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைப்பதை உறுதிச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் விளக்கினார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு