Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.02-

சபா, ரணாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை 25 வயது இளைஞர் ஒருவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இன்று கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஹூர்மான் ஹுசேன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

இந்தக் கடுமையான குற்றச்சாட்டைப் பதிவு செய்த அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் Fazriel Fardiansyah Abdul Kadir, பிணை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு மிக அருகிலேயே வசிப்பதால், பிணை வழங்கப்பட்டால் அது சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ வாய்ப்புள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து, அந்த இளைஞரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் வி... | Thisaigal News