லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்சப்பணம் என்று நம்பப்படும் பெரும் தொகையை மீட்பத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஆணையத்தின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் சிவகுமாரிடம் கடந்த திங்கட்கிழமை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் இரண்டாவது முறையாக விசாரணை செய்துள்ளனர். லஞ்சப் பணம் மீட்கப்படவில்லை. அந்தப் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பணத்தைத் தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் எஸ்.பி.ஆர்.எம். முனைப்பு காட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனிடைய இந்த லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையில் எந்தவொரு ஆருடத்தையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு எஸ்.பி.ஆர்.எம்.தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


