கோலாலம்பூர், நவம்பர்.05-
தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி, பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையை எதிர்த்து சவால் விடுவதில் முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஸைனுடின் குடும்பத்தினர் இன்று வெற்றி பெற்றனர்.
எஸ்பிஆர்எம்மின் நடவடிக்கையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவதற்கு டாயிம் குடும்பத்தினர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
டாயிம் குடும்பத்தினர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு தகுதிபாடு இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதியை வழங்குவதாக நீதிபதி டத்தோ அலிஸா சுலைமான் தெரிவித்தார்.
டாயிம் குடும்பத்தினர் சார்பில் அவரின் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலிட் மற்றும் நான்கு பிள்ளைகள் இவ்வழக்கை முன்னெடுத்துள்ளனர்.








