டிவி தீக்கா வின் பிரபல செய்தி வாசிப்பாளர் ரேய்மொன் கோ காலமானார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரேய்மொன் கோ, இன்று காலை 10.40 மணியளவில் உயிர் நீத்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 62.
நயிட்லான் டிவி தீக்கா என்ற இரவு நேர ஆங்கில செய்தியை வாசிப்பாளரான ரேய்மொன் கோ, இஸ்லாத்தை தழுவியதைத் தொடர்ந்த அவரின் பெயர் முஹம்மது ஜமான் கோ அப்துல்லா என மாற்றிக்கொண்டார்.
ஆங்கில செய்தியில் தெளிவான உச்சரிப்பு, சொற்பொருள், சொல்லுமிடம் உணர்ந்து, தேவையான இடத்தில் ஏற்ற இறக்கங்களுடன் செய்தியை வாசிப்பதில் தன்னிகரற்று விளங்கிய ரேய்மொன் கோ.
30 ஆண்டுகளுக்கு முன்பு டிவி தீக்கா வில் 7 ஓ' குலோக் நியூஸ் செய்தியில் ஒரு செய்தி படைப்பாளராக இணைந்த ரேய்மொன் கோ, வளர்ந்து வரும் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார் என்று அவரின் மறைவையொட்டி தெரிவிக்கப்பட்டுள்ள புகழாஞ்சலி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த ரேய்மொன் கோ வின் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


