பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.18-
கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால், நான்காம் படிவ மாணவி கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த மாணவியின் உடற்கூறு ரீதியான சவப் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு ஒன்று முதல் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவ நிபுணரின் அந்த அதிகாரப்பூர்வமான சவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அந்த மாணவியின் உடலில் எத்தனை கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மொத்ம் 127 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 14 வயது மாணவனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.