Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மாஸ்விங் விமான நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாஸ்விங் விமான நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல்

கூச்சிங், நவ. 25-


மலேசிய வான்போக்குவரத்து குழுமத்தின் துணை விமான நிறுவனமான மாஸ்விஙகை சரவாக் மாநில அரசு கொள்முதல் செய்வது தொடர்பான இறுதிக்கட்ட ஒப்பந்தம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.

இதனை சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி அபாங் உறுதி செய்துள்ளார். வர்த்தக சமுதாயத்திற்கும், சுற்றுப்பயணிகளுக்கும் சரவா மாநிலத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மாஸ்விங்- நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல் செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாஸ்விங்கை கொள்முதல் செய்வது மூலம் சரவா மாநில விமான நிலையம் ஆக்கப்பூர்வமான முறையில் மேம்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →