Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சட்டத்துறை நியமன செயல்முறையை அனைவரும் மதிக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டத்துறை நியமன செயல்முறையை அனைவரும் மதிக்க வேண்டும்

புத்ராஜெயா, ஜூலை.11-

கூட்டரசு அரசியலமைப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டத்துறை நியமனச் செயல்முறையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதித்துறையைப் பாதுகாக்கும் பொருட்டு வரும் திங்கட்கிழமை மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் நடத்தவிக்கும் பேரணி தொடர்பில் பிரதமர் கருத்துரைத்தார்.

மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சட்டத்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பேரணியைத் தாம் நிறுத்தச் சொல்லவில்லை. மாறாக, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், மதிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த போது பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.

சட்டத்துறையைப் பாதுகாக்கும் பொருட்டு திங்கிட்கிழமை மிகப் பெரியப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →