Jul 1, 2026
Thisaigal NewsYouTube
வழிபாட்டுத் தலம் போன்ற அமைப்பைச் சேதப்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

வழிபாட்டுத் தலம் போன்ற அமைப்பைச் சேதப்படுத்திய நபர் கைது

Share:

மலாக்கா, செர்க்காம் பகுதியில் வழிபாட்டுத் தலம் போன்ற ஒரு அமைப்பைச் சேதப்படுத்திய 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நபர், ஏற்கனவே மனநலச் சிகிச்சை பெற்றவர் என்பதும், விசாரணையில் தனது செயலை அவர் ஒப்புக்கொண்டதாகவும், தற்போது அவர் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டத்தோ சுல்கைரி குறிப்பிட்டார்.

அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த வழிபாட்டுத் தல அமைப்பு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாசின் நகராண்மைக்கழகத்தினால் இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று டத்தோ சுல்கைரி கேட்டுக்கொண்டார்.

Related News