கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
பள்ளி வளாகங்களில் புகைப் பிடித்தல் அல்லது வேப் மின் சிகரெட்டைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகங்களில் இத்தகையக் குற்றங்களை இழைக்கும் ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது கூடியபட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் முன்னிலையில் சிகரெட் புகைப்பது, மின் சிகரெட்டைப் பயன்படுத்துவது இனி அனுமதிக்கப்படாது. இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது.
மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய ஆசிரியர்கள், பண்பு நலன் குறைந்திருப்பதைக் காண கல்வி அமைச்சு விரும்பவில்லை. அவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு 2024 ஆம் அண்டு பொது சுகாதாரம் மீதான புகைப் பிடித்தல் எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.








