செர்டாங், அக்டோபர்.14-
சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, ஆள் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த நாய் விவகாரத்தில் பல்கலைக்கழகம் கையாண்ட நடைமுறை குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் பகிரங்க மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தைக் கையாண்ட நடைமுறையைப் பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாகக் கருதுவதாக அது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த நாய் கொல்லப்படும் காட்சி தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாது ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இதனைப் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.








