Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உண்மைத் தன்மையை அராய்வீர்
தற்போதைய செய்திகள்

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உண்மைத் தன்மையை அராய்வீர்

Share:

கடந்த ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், தமக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மையை ஆராயும் படி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

அதே வேளையில், அந்த அறிக்கைத் தொடர்பில், முகைதீன் யாசினிடம் தாம், மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதையும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு, தமது அறிக்கையில் உள்ள அடிப்படை கூறுகளை ஆராயும் படி அந்த முன்னாள் பிரதமருக்கு அன்வார் அறிவுறுத்தினார்.|

சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அரசியல் நன்கொடையை பெரிக்காத்தான் நேஷனல் பெற்றது என்று அன்வார் கூறியதாக குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கும் முகைதீன் யாசினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் எதிர் வினையாற்றினார்.

தமது அறிக்கையில், அடிப்படை குற்றச்சாட்டு இல்லாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அன்வார் வினவினார்.

Related News