சிரம்பான், டிசம்பர்.26-
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டேசா பல்மாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்பு வளாகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் என்று நம்பப்படும் சந்தேகப் பேர்வழி, நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் என்று நம்பப்படுவதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர், 62 வயது யோ ஹோக் சன் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. அந்த நபரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அயாங் என்று சுருங்க அழைக்கப்படும் அந்தர நபர் ரசாயன தயாரிப்பில் கைத்தேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரசாயன நிறுவனத்தில் வேலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த நபர் மிகவும் ஆபத்தானவர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் குறிப்பிட்டார்.








