Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் OPS SAPU சோதனை : அந்நியத் தொழிலாளர்களைப் பிடிக்க முயன்றபோது அதிகாரி காயம்
தற்போதைய செய்திகள்

கூலிமில் OPS SAPU சோதனை : அந்நியத் தொழிலாளர்களைப் பிடிக்க முயன்றபோது அதிகாரி காயம்

Share:

கெடா மாநில குடிநுழைவுத் துறை நேற்று காலை கூலிம், பாடாங் மேஹாவில் உள்ள கட்டிட நிர்மாணத் தளத்தில் நடத்திய 'ஒப்ஸ் சாப்பு' அதிரடி சோதனையில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

சுமார் 155 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அதிகாரிகளைக் கண்ட அந்நிய நாட்டினர்கள் தப்பியோடி கட்டிடக் கூரைகளிலும் இயந்திரங்களுக்கு இடையிலும் பதுங்கினர். அவர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றபோது, குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.

காயமடைந்த அதிகாரி உடனடியாக கூலிம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

25 அதிகாரிகள் பங்கேற்ற இந்தச் சோதனையில், அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்