Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பறவை மோதியதால் விமானம் தாவாவிற்கே திரும்பியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பறவை மோதியதால் விமானம் தாவாவிற்கே திரும்பியது

கோலாலம்பூர், டிச.9-


கடந்த சனிக்கிழமை தாவாவிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட ஏர் ஆசிய விமானம், மீண்டும் தாவாவிற்கே திரும்பியது குறித்து ஏர் ஆசியா விமான நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

பறவை மோதியதால், விமானத்தின் ஒரு இயந்திரத்தில் கோளாறு இருப்பது, பறக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டதால், விமானத்தை தாவாவிற்கே திருப்ப வேண்டிய நிர்ப்பந்தம், விமானிக்கு ஏற்பட்டதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தலைமை துணை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் செஸ்டர் வூ தெரிவித்தார்.

ஏகே 5741 என்ற பதிவு எண்ணைக்கொண்ட ஏர் ஆசிய விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாற்றினால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானத்தை தாவாவில் தறையிறக்க வேண்டியிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →